Sunday 31 May 2009

Microsoft இன் புது முயற்சி( http://www.bing.com )

கூகிள் நிறுவனத்தின் தேடுபொறியானது இனையதள உலகில் அசைக்கமுடியாத சக்தியாக பல ஆண்டுகளாக உலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்து கொண்டிருக்கிறது. இதற்குப் போட்டியான Microsoft நிறுவனம் பல தேடுபொறிகளை நேரத்துக்கு நேரம் வெளியிட்டு வந்தாலும் உலகின் முடிசூடா மன்னனான கூகிள் தேடுபொறியை Microsoftடினால் வீழ்தமுடியவில்லை. இதுவரை Microsoft வெளிவிட்ட MSN, windows live search, live search போன்ற தேடுபொறிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. எனினும் Microsoft தனது அடுத்த முயற்சியாக இதோ மிகவும் சிறப்பான அதி நவீன தேடுபொறியை வெளிவிட தயாராகிக்கொண்டுள்ளது.
BING இதுவே Microsoft இன் அடுத்த வெளியீடு. இவ் BING பல புதுத் தொழில் நுட்பங்களை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது வழமையான தேடுபொறியாக இல்லாமல் தீர்மானமான முடிவுகளை வழங்கக்கூடிய DECISION ENGINE ஆக இருக்கும் என வல்லுனர்கள் கூறியுள்ள்ளனர். BING, இப்பெயருக்காக Microsoft கூறும் காரனங்கள் memorable, short, easy to spell. எனினும் இனையதள தேடலாலர்களுக்கு கூகிலே memorable, short, easy to spell. இருந்தாலும் நாம் Microsoft இன் வெளியீடுகளை புறந்தள்ளிவிட முடியாது என்பது வெளிப்படை. எதுவாகினும் இன்னும் சில நாட்களில் அதாவது June 3, 2009 BING நமது இனையங்களில் தவழத் தெடங்குகிறது. பொறுத்திருந்து தான் பார்ப்போமே BING??? or GOOGLE??? இனி தேடலாலர்களுக்கு தேடல் என்பது இலகுவாகிறது.
நன்றி
ச.சத்தியன்

No comments:

Http vs Https